Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Mercury Transit In Cancer 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதிவார்கள் மற்றும் கிரகங்களிலேயே புதன் மிகவும் வேகமாக தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
புதனின் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றம் ஏற்படும் போதும் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இந்நிலையில் புதன் ஜூன் 22 ஆம் தேதி, அதாவது இன்று புதன் சந்திரனின் ராசியான கடக ராசிக்கு செல்கிறார். கடக ராசிக்கு புதன் செல்வதால் பலவிதமான நன்மைகளைப் பெற்றாலும், உணர்ச்சிகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் புதன் கடக ராசியில் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு பல அவசர முடிவுகளை எடுக்கலாம். இதன் மூலம் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடலாம். அதுவும் ஜூன் 22 ஆம் தேதி கடக ராசிக்கு செல்லும் புதன், அந்த ராசியில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை இருப்பார்.
இதனால் சில ராசிக்காரர்களுக்கு இக்காலகட்டமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது புதன் கடக ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். தாயுடனான உறவு படிப்படியாக மேம்படும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும்., குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்குமிக்க ஒருவரின் நட்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட், சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். மொத்தத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல துறைகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களின் மரியாதை அலுவலகத்தில் அதிகரிக்கும். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நல்ல அந்தஸ்து கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன்க கிடைக்கும். இதுவரை அலுவலகத்தில் மன அழுத்தத்தை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு சம்பள உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
