Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
புதன் பெயர்ச்சியால் மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
Mercury Transit In Aries 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் புதன் மே மாதம் 07 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். புதன் செவ்வாயின் ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

அதுவும் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலை மற்றும் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் மற்றும் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் எந்னபதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய நன்மைகளைப் பெறவுள்ளனர். அதுவும் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு பல புதிய வாய்ப்புக்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி பெற்று செல்வத்தை குவிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
புதிய வேலையைத் தொடங்க நினைத்து முயற்சித்தால், நல்ல பலனைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகள் இருவரும் உணர்வுகளை மதித்து நடப்பீர்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் நிலை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications