Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்களை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கப்போகுது..
Mercury Transit In Aayilyam Nakshatra On 07 July 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களில் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்நிலையில் இந்த புதன் ஜூலை 07 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியும் புதன் தான்.

சொந்த நட்சத்திரத்திற்கு புதன் செல்வது சற்று சிறப்பானது தான். ஆனால் இந்த புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கப் போகிறது. குறிப்பாக கல்வி, தொழில் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் இதன் விளைவு தெரியும்.
அதுவும் ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், இந்த பெயர்ச்சி காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இக்காலத்தில் அவர்கள் மன குழப்பத்தையும் வேலையில் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும். இப்போது புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் எந்நேரமும் மன குழப்பத்தில் இருப்பார்கள். படிப்பில் கவனச்சிதறல் ஏற்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் மூலம் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் அல்லது காதுகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கடகம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவொரு பழைய முதலீடும் இழப்பு அல்லது திடீர் செலவுகளுக்கு வழிவகுக்கும். இக்காலத்தில் நற்பெயர் பாதிக்கப்படலாம். எனவே பணியிடத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவிதமான வதந்திகள் அல்லது சர்ச்சைகளிலிருந்தும் உங்களை விலக்கி வைக்க வேண்டும். கடின உழைப்புக்கான பலன் நிச்சயமாக கிடைக்கும், ஆனால் அதற்காக நீங்கள் நேர்மையுடனும் பொறுமையுடனும் உழைக்க வேண்டும்.
விருச்சிகம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் இடமாற்றங்களை சந்திக்கலாம். இது உங்களின் திட்டங்களை பாதிக்கலாம். இக்காலத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த முடிவையும் நன்கு யோசித்த பின்னரே எடுக்க வேண்டும். நிதி நிலைமை சற்று உறுதியற்று இருக்கும். பழைய ஆரோக்கிய பிரச்சனைகள் மீண்டும் தோன்றலாம். பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் தேடி வந்து தொந்தரவு செய்யும்.
மகரம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சற்று சவாலானதாக இருக்கும். புதனின் செல்வாக்கு உங்கள் வாழ்க்கையில் சிலரை உங்களுக்கு எதிராக ஏமாற்றவோ அல்லது உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கவோ வழிவகுக்கும். இக்காலத்தில் உங்கள் எண்ணங்களையும், திட்டங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அரசியல் அல்லது எதிரிகளுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications