Latest Updates
-
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.
புதன் உதயமாவதால் பிப்ரவரி 22 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கப்போகுது...
Mercury Rise In Aquarius 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
அந்த வகையில் தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் புதன் கும்ப ராசியில் நுழையும் போது அஸ்தமன நிலையில் நுழைந்தார். இந்நிலையில் புதன் பிப்ரவரி 22 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். புதன் கும்ப ராசியில் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இன்னும் சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது புதன் கும்ப ராசியில் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எப்பேற்பட்ட சவால்களையும் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் இருந்தால், அது இக்காலத்தில் தீரும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வேகமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் மூலம் இலக்கை எளிதில் அடைவார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதனின் அருளால் பல நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். படிப்பில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
வங்கி, ஏற்றுமதி-இறக்குமதி, வணிகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
