Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் வக்ர பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் ஒவ்வொரு ராசிக்கும் செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஞானத்தைக் கொடுக்கும் கிரகமாக இருக்கிறார், அதனால்தான் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. தற்போது நவம்பர் 26 ஆம் தேதி புதன் கிரகம் விருச்சிக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறது. இதன் மூலம் புதனின் ராசி மாற்றமும், நட்சத்திர மாற்றமும் ஏற்படுகிறது.
புதனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பல்வேறு வழிகளில் பாதிக்கும். இதில் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் மிகப்பெரிய யோகத்தை அடையப் போகிறார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் இவர்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வாய்ப்புள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குலுக்கல் லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தேடிவர வாய்ப்புள்ளது. அவர்களுக்கு அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 2 வாரங்களில் வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறலாம்.
பூர்வீகச் சொத்தை விற்பதன் மூலம் உங்களுக்கு நல்ல தொகை வந்து சேரும். இது நிதிச் சுமைகளைக் குறைக்க உதவும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ராஜா போல வாழ்வார்கள். அவர்கள் கடன் சுமைகளை குறைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் வரும். சேமிப்பு வெகுவாக உயரும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தை புதிய இடங்களில் தொடங்கலாம். இந்த ராசிக்காரர்கள் எடுத்த பணிகளை மிகவும் வெற்றிகரமாக முடிக்க முடியும். நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தாங்கள் ஆசைப்பட்டபடி வாழலாம். அவர்கள் விரும்பிய இடங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். வீடு மற்றும் நண்பர்களிடமிருந்து அவர்கள் விரும்பும் ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் விரும்பிய வேலையைப் பெற முடியும். துலாம் ராசி வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் பெரிய லாபத்தைப் பெறலாம். நிதி நெருக்கடிகள் இல்லாத நாட்கள் அவர்களுக்காக காத்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்திருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்க இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். ஏற்கனவே வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதாரரீதியாக பெரிய முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக வாங்க நினைத்திருந்த வாகனங்கள் வாங்க இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிதாக வீடு காத்திருந்தவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். நிதி நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
