புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் குவியும்..

Mercury Nakshatra Transit On 07 January 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், தொழில் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் புதன் 2026 ஜனவரி 07 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது புதன் பூராடம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

Mercury Nakshatra Transit On 07 January 2026 Career Wise Lucky Zodiac Signs

இந்த சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு புதன் செல்வதால் சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது புதனின் நட்சத்திர மாற்றத்தால் தொழில் ரீதியாக நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மன உறுதி அதிகரிக்கும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். இக்காலத்தில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கன்னி

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலம் சிறப்பாக இருக்கும். வணிகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, January 6, 2026, 23:30 [IST]
Desktop Bottom Promotion