Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: ஜூன் 06 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
Mercury Make Badra Rajyog On 06 June 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். மேலும் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றக்கூடியவர் தான் புதன்.
தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் வருகிற ஜூன் 06 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் மிதுன ராசியில் நுழைவதால் சக்தி வாய்ந்த பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் மகாபுருஷ ராஜயோகங்களுள் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, புதனின் அருளால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இப்போது புதனால் உருவாகும் சக்தி வாய்ந்த பத்ரா ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும். இக்காலத்தில் குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் நல்ல ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
