Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகம்: செப்டம்பர் 23 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Mercury Make Badra Rajyog In Virgo 2024: ஜோதிடத்தில், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, ராசியையும் மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது சிம்ம ராசியில் அஸ்தமன நிலையில் பயணித்து வரும் புதன், வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகமானது மங்களகரமான ஒரு பஞ்ச மகாபுருஷ் யோகங்களில் ஒன்றாகும்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் நுழைந்து பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவீர்கள். உங்களின் நீண்ட நாள் திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். நிதி ரீதியாக வலுவாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால், நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். பரம்பரை சொத்துக்கள் நல்ல நன்மைகளைத் தரும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். தாயின் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் நுழைந்து பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் இரண்டாவது வீட்டில் புதன் நுழைந்து பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேறறம் ஏற்படும். முக்கியமாக புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் செலவுகளை திறம்பட கட்டுப்படுத்துவீர்கள். மார்கெட்டிங், வங்கி, ஊடகம், பேச்சு ஆகிய துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications