Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
50 ஆண்டுகள் கழித்து புதன் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Mercury Made Vipreet Rajyog 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, பல சுபயோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மனித வாழ்க்கையில் தெரியும். நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் அஸ்தமன நிலையில் கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சூரியன், சனி ஆகிய கிரகங்கள் பயணித்து வருகின்றன. இந்நிலையில் புதனும் நுழைந்துள்ளதால், இந்த 3 கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிப்பதோடு, விபரீத ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளன.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக, வாழ்க்கையில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வரப்போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். இப்போது புதன் உருவாக்கியுள்ள விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது பலவிதமான நன்மைகளை தரும். முக்கியமாக திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் பங்குச் சந்தையில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதனின் பரிபூர்ண அருளால் வெற்றிகள் கிடைப்பதோடு, நிறைய லாபமும் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். உங்களின் திட்டங்கள் நல்ல பலனைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரப்போகிறது. செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சமூகத்தில், பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பொருள் வசதிகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது எதிர்பாராத நன்மைகளை வழங்கப்போகிறது. இக்காலத்தில் உங்களின் வாழ்க்கைத் துணையும் அவரது தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சொத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications