Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் டிசம்பர் 16 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Mercury Direct In Scorpio On 16 December 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். புதனின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் நவம்பர் 26 முதலாக வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், இதுவரை புதனால் பெறவிருந்த நற்பலன்களில் இருந்த தடைகள் நீங்கும்.

இதன் விளைவாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய திட்டங்களால் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செயல்திறன் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறும். பணியிடத்தில் வழங்கப்படும் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சற்று ஏற்றத்தாழவுகள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் கவனமாக இருந்தால், மோசமான விளைவை தவிர்க்கலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதனின் அருளால் செல்வம் பெருகும். எதிர்பார்த்த வேலை கிடைககும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
