Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் டிசம்பரில் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Mercury Direct In Scorpio On 16 December 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் ஒரு ராசியில் குறுகிய நாட்களில் பயணிக்கக்கூடியவர்.
புதனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் வலுவிழந்து பயணிக்கவுள்ளார். இக்காலகட்டத்தில் புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபடும்.

புதன் இந்த வக்ர நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணவுள்ளார்கள். இப்போது புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட நல்ல முன்னேற்றமடையும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். உறவுகளைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். மொத்தத்தில், இக்காலம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக குடும்பத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடிக் கெண்டிருந்தால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். எடுக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
