Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அவங்க மனைவியை மகாராணி மாதிரி பார்த்துக்குவாங்களாம்... உங்க ராசி என்ன?
திருமணத்தை விரும்பும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு அவர்களை ராணி போல பார்த்துக்கொள்ளும் அக்கறையான கணவர் கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே மாறுகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஒருவரின் ஆளுமை என்னவென்று தெரிந்த கொள்ளாமல் வேறு காரணிகளின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வதுதான்.
ஒருவரின் ஆளுமையை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசியும், நட்சத்திரமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஜோதிட கணிப்புகளின் படி குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்குபவராக இருப்பார்கள்.

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை துல்லியமாக கூற முடியாவிட்டாலும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் மனைவியின் மீது தீவிர காதல் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி ஆண்கள் தங்கள் மனைவியை மகாராணியாக பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கிருத்திகை
இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை நேசிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார்கள். தங்கள் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அவர்கள் எதையும் செய்வார்கள், அது சமைப்பது, சுத்தம் செய்வது அல்லது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது என எதுவாக இருந்தாலும் சரி, அதை முழுக்காதலுடன் செய்வார்கள்.
இந்த நட்சத்திர ஆண்கள், ஒரு உறவு சரியானது என்று உறுதியாக நம்பினால் அதை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் மனைவி மீது அவர்களுக்கு இருக்கும் தீவிரமான காதல், கருணை மற்றும் தியாகங்கள் பாராட்ட்டுக்குரியவை. அவர்கள் திருமண உறவானது அவர்களுக்கு அனைத்தையும் விட வாழ்வில் முக்கியமானதாக இருக்கிறது.
உத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையான மற்றும் விசுவாசமான கணவராக அறியப்படுகிறார்கள். திருமணத்தில் நம்பிக்கை என்பது அவர்கள் மிகவும் மதிக்கும் ஒன்றாகும். அவர்களின் வாழ்க்கைத் துணை நம்பகமானவராக இருந்தால், அவர்கள் நம்ப முடியாத அளவிற்கு அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள். அவர்களிடம் சந்தேகமோ அல்லது பொஸஸிவ குணமோ இருக்காது. அவர்கள் மனைவியை தீவிரமாக காதலிப்பது மட்டுமின்றி தங்கள் துணையின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
விசாகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவியை தீவிரமாக நேசிக்கும் கணவராக இருப்பார்கள். இந்த நட்சத்திர ஆண்கள் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள எப்போதும் சிறப்பான ஒரு துணையைத் தேடுகிறார்கள். அவர்கள் தங்களை நேசிக்கும் பெண்ணை அதைவிட அதிகமாக நேசிக்க வேண்டுமென்ற லட்சியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களின் கருத்துக்கள் அவர்களின் தன்னம்பிக்கையை அசைக்கக்கூடும் என்றாலும், அவர் தனது மனைவி தன்னை அழகாகவும், சக்திவாய்ந்தவராகவும் உணர உதவுவார். அவர் தன் மனைவியின் பிறந்த வீட்டை விட தன்னுடன் தனது மனைவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பார்கள்.
பூசம்
இந்த நட்சத்திர ஆண்களுக்கு அனைத்தையும் விட தங்களின் குடும்பமே மிகவும் முக்கியமானதாகும். அதனால்தான் அவர்கள் சிறந்த கணவர்களில் ஒருவராக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியின் தேவைகளுக்கு கவனம் செலுத்தும், பொறுப்பான மற்றும் உறுதியான கணவராக இருப்பார்கள்.
திருமண உறவில் அவர்கள் இரக்கமுள்ளவராகவும் விசுவாசமுள்ளவராகவும் இருப்பார். அவர்கள் தங்கள் மனைவிக்கென சிறப்பு உணர்வைக் கொண்டுள்ளனர், அவர்களுக்கு அளிக்கப்படும் அன்பும், அக்கறையும் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

