Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த 5 நட்சத்திரத்தில பிறந்த ஆண்கள் அவங்க மனைவி சொல்ற பேச்ச மட்டும்தான் கேட்பார்களாம்..நீங்க இதுல இருக்கீங்களா
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான உறவாகும். திருமண பந்தம் என்பது ஒருவரையொருவர் புரிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் நேசிப்பது பற்றியது. திருமணம் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதே தவிர, ஒருவரையொருவர் ஆள்வது கிடையாது.
தம்பதிகளில் ஒருவர் ஒருபோதும் மற்றவரை விட உயர்ந்தவர் அல்ல. ஆனால் சில அசாதாரண சூழ்நிலைகளில், அது தலைகீழாக மாறுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பல தம்பதிகள் ஒருவரையொருவர் ஆளவும் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவும் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தங்கள் கணவரை ஆழ ஆசைப்படுகிறார்கள்.

ஜோதிடத்தின்படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் செல்வாக்கு ஒருவரின் குணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. இது பெரும்பாலும் திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சில நட்சத்திரங்களில் பிறந்த ஆண்களால் முடிவுகளை எடுக்கவும், விஷயங்களைச் சரியாகக் கையாளவும் முடியாது.
இந்த பொறுப்பை அவர்களின் மனைவி எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியின் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் பொதுவாக அமைதியான இயல்புடையவர்கள். அவர்கள் உணர்ச்சிரீதியாகவும் சிந்தித்து செயல்படுவார்கள். பெண்களிடம் மிகவும் கண்ணியமாக பழகுவார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணையின் ஆர்வங்கள் மற்றும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலா சூழ்நிலைகளில் தங்கள் மனைவியின் அறிவுரைகளையும் பின்பற்றுகிறார்கள். இந்த அறிவுரைகள் அவர்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களும் எப்போதும் தங்கள் மனைவியுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் முடிந்தவரை மோதலைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் தங்கள் மனைவி ஆதிக்கம் செலுத்துவதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு தேவை வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும்தான். அவர்கள் அமைதியை விரும்புவதால், தங்கள் மனைவிக்குக் கீழ்ப்படியவும், அவர்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முயற்சி செய்கிறார்கள்.
பூரம்
பூர நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியின் பேச்சை வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் வசீகரமானவர்கள், விஷயங்களைத் தாங்களாகவே கையாள விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் இதனால் நல்ல விஷயங்களே நடக்கும்.
உத்திரட்டாதி
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் பொதுவாக மென்மையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். அவர்கள் ஆன்மீகரீதியாக பல விஷயங்களை விரும்புகிறார்கள். எனவே பெரும்பாலும், அவர்கள் எப்போதும் தங்கள் மனைவியின் நடை, பேச்சு மற்றும் ஆர்வங்களை விரும்புவார்கள். வாழ்க்கையில், அவர்கள் குடும்பம், நிதி மற்றும் சமூக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவையனைத்தையும் பராமரிக்க அவர்கள் எப்போதும் தங்கள் மனைவியின் நிழலில் இருக்க விரும்பும் நபராக இருப்பார்கள்.
ஸ்வாதி
ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தையும், அமைதியையும் விரும்புவார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் துணையால் கட்டுப்படுத்தப்படுவதை புகிறார்கள். மேலும், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தங்கள் மனைவியின் உதவியை நாடுவார்கள். அவர்கள் தங்கள் மனைவியின் நலன்களுக்கு ஏற்ப செயல்படுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
