May Month Rasi Palan 2025: மே மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமாக இருக்கப்போகுது...

May Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் மே மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மே மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மே மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 மே மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

May Month Rasi Palan 2025 May 2025 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் கோபத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கம். தேவையற்ற செலவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். வெற்றி பெற மே மாதத்தில் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! மே மாதம் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை புத்திசாலித்தனமாக செய்யுங்கள். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களும் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் சில சவால்களை சந்திக்கலாம். உடல்நலம் சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்க வாழ்க்கை முறையில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! மே மாதத்தில் புதிய திட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களை சந்திக்கலாம். மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். குடும்பத்தில் பதற்றம் ஏற்படக்கூடும். இருப்பினும் குருவின் ஆசியால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! மே மாதத்தின் தொடக்கத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொண்டால் மன அமைதி கிடைக்கும். தொழில் ரீதியாக சாதாரணமாக இருக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறலாம். சனி பகவானின் ஆசியால் வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவ பண்புகள் நல்ல வெற்றியைக் கொண்டு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு இந்த மாதம் சற்று தொந்தரவாக இருக்கும். சனி, ராகு, கேது, செவ்வாய் சில பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! மே மாதம் தொழில் ரீதியாக பரபரப்பாக இருக்கும். குறுகிய பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். ஆரோக்கியம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். வேலையில் சில சவால்களை சந்திப்பதால், சற்று கவலைப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். இருப்பினும் குருவின் ஆசியால் புதிய சொத்துக்கள் கிடைக்கும். உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! மே மாதம் உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். வீட்டிற்காக நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் குறித்த எந்த அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ராகுவால் இந்த மாதம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! மே மாதத்தில் சில விஷயங்களில் மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சிரமங்களை சந்திக்கலாம். ஆயினும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சூரியன், சுக்கிரன் மற்றும் புதனுடன் சேர்த்து குருவின் ஆசியைப் பெறலாம். ஒவ்வொரு வேலையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணத்தை சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! மே மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் பொறுமையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேலை பாழாகிவிடும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்நிலையில் பேசி பிரச்சனையை சரிசெய்ய முயற்சி செய்வது நல்லது. கேதுவின் நிலையால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! மே மாதத்தில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு தடையையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் வேலை தொடர்பாக சில பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சுமாராக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் சிந்தனையில் புதுமை இருக்கும். ஐடி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்கவும் முடிவும். குரு மற்றும் சுக்கிரனின் ஆசியால் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சனி பகவானின் நிலையால், அவ்வப்போது சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! மே மாதத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதுவரை வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து பெருமளவில் லாபத்தைப் பெறலாம். ஆனால் சனி பகவானின் நிலையால் வருமானத்தில் சிறிது குறைவு ஏற்படலாம். இந்நிலையில் குறைவாகவே பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, April 24, 2025, 22:45 [IST]
Desktop Bottom Promotion