Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூலை 23 முதல் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு வெற்றிகள் குவியப் போகுது..
Mars Transit In Uthiram Nakshatra 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், நட்சத்திரத்தையும் மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட.

இந்த செவ்வாய் வருகிற ஜூலை 23 ஆம் தேதி சூரிய பகவானின் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் உத்திரம் நட்சத்திரமானது 12 ஆவது நட்சத்திரமாகும். இந்த உத்திரம் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக திடீர் நிதி ஆதாயங்களையும், முன்னேற்றத்தையும் பெறவுள்ளனர். சிலருக்கு சொத்துக்கள் குவியும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயரவு ஏற்படப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரியல் எஸ்டேட் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications