Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Mars Transit In Leo On 7 June 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், இதுவரை சந்திரனின் கடக ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் ஜூன் 07 ஆம் தேதி சூரிய பகவானின் ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார்.
தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய், சிம்ம ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும் வகையில் இருக்கும்.

இன்னும் சில ராசிக்காரர்கள் நிதி இழப்பு, ஏமாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்கலாம். குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். இக்காலத்தில் எதிர்பாராத சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த முடிவு மோசமானதாக இருக்கலாம். எந்த வேலையையும் அவசரமாக செய்வதைத் தவிர்த்து, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சற்று பதட்டமாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்குவது தொடர்பான முடிவுகளில் தடைகள் ஏற்படலாம். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றும் நடத்தை, குடும்ப உறுப்பினர்களை மோசமாக பாதிக்கும். எனவே பொறுமையையும் பணிவையும் பேணுங்கள்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்கும். இப்படியான பேச்சால் குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவில் விரிசல் ஏற்படலாம். நிதி ரீதியாக பலவீனமாக இருக்கும். இக்காலத்தில் சிந்திக்காமல் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்கலாம். திடீரென்று சில எதிர்பாராத செலவுகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த காலகட்டத்தில் சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எந்த முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
