Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும்?
Mars Transit In Capricorn 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை இருப்பார்.
2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மகர ராசியில் செவ்வாய் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை இருந்து, பின் கும்ப ராசிக்குள் நுழைவார்.

மகர ராசியில் செவ்வாய் நுழைந்ததால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இப்போது மகரம் சென்றுள்ள செவ்வாயால் மேஷம் முதல் மீனம் வரையிலான12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் அதிகப்படியான வேலைப்பளுவால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு வேலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவுகளில் சற்று நேர்மையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், உறவுகளில் விரிசல் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்கார்கள் வேலை விஷயத்தில் வழக்கத்தை விட அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் வேலை தொடர்பாக எந்த புதிய பயணத்தையும் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வீடு வாங்கும் கனவு நனவாகும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பு மற்றும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக சற்று மந்தமாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியாது.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சுமாராக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் உங்களின் வேலையில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காதல் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். அதோடு ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வியாபார்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆனால் அந்த பயணத்தின் போது கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிறைய லாபம் கிடைப்பதால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
