Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
செவ்வாய் பெயர்ச்சியால் அக்டோபர் 20 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய புயலே அடிக்கப்போகுது..
Mars Transit In Cancer On October 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் இருப்பார். செவ்வாயின் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றம் ஏற்படும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசியானது செவ்வாய் வலுவிழந்து இருக்கும் ராசியாகும். இந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது கடக ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பிரச்சனைகளையும், பண இழப்பையும் சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளால் அவதிப்படக்கூடும். இக்காலத்தில் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண இழப்பை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் உங்களை யாரேனும் ஏமாற்றக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும. பெற்றோரின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கலாம். குழந்தைகளைக் கொண்டவர்கள், அவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் பிரச்சனைகளைத் தவிர்க்க, எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் நன்கு சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க எந்த ஒருமுடிவை எடுப்பதாக இருந்தாலும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தவறுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் வேலைக்கே உலை வைத்துவிடும். வணிகர்கள் தங்கள் கூட்டாளரின் ஆதரவைப் பெறமாட்டார்கள். நிறைய கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும் பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications