செவ்வாய் பெயர்ச்சியால் உருவான தனலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...

Mars Transit In Cancer Made Dhanlakshmi Rajyog 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், நம்பிக்கை, வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாயின் ராசி மாற்றமானது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இந்த செவ்வாய் சமீபத்தில் தான் கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசியில் செவ்வாய் வலுவிழந்து இருப்பார். இருப்பினும் செவ்வாய் கடக ராசிக்குள் நுழையும் போது தனலட்சுமி ராஜயோகமானது உருவாகியுள்ளது.

Mars Transit In Cancer Made Dhanlakshmi Rajyog 2024 These Zodiac Signs Get Huge Money Benefits

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது தன லட்சுமி ராஜயோகத்தால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்று தனலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை வழக்கத்தை விட மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆளுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பங்கு சந்தையின் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் இலக்குகளை அடைவீர்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தனலட்சுமி ராஜயோகத்தால் செலவுகள் குறைந்து, பண வரவு அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளை செய்வதன் மூலம் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் வசித்து வந்தால் பல நன்மைகளுடன், முன்னேற்றங்களையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் நுழைந்து தனலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பொருள் இன்பம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வீட்டின் வசதி அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 24, 2024, 23:40 [IST]
Desktop Bottom Promotion