செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்!

Mars Transit In Cancer 2026: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களிலேயே செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் செவ்வாய் நவம்பர் 12 ஆம் தேதி வரை இருப்பார்.

Mars Transit In Cancer 2026 These Zodiac Signs Should Be Careful

ஜோதிடத்தில் கடக ராசியில் செவ்வாய் நீச்சமடைவதாகக் கருதப்படுகிறது. மேலும் சந்திரன் மற்றும் செவ்வாயின் ஆற்றல்களும் மிகவும் வேறுபட்டவையாகக் கருதப்படுகின்றன. செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இப்போது செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் வேலைகளை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக பணியிடத்தில் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். வேலையை முடிக்க முடியாமல் சிரமப்படக்கூடும். கூட்டு தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு ரிஸ்க் எடுக்க நினைத்தாலும் நன்கு யோசித்த பின் எடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமணமான தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலமானது சவாலானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை குறைவதைக் காணக்கூடும். அதிக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக யாருடனும் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய பிரச்சனையாகி, நீதிமன்றம் வரை கொண்டு செல்லும். கலைத் துறையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 11, 2026, 23:40 [IST]
Desktop Bottom Promotion