Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
18 மாதங்களுக்கு பின் கடகம் செல்லும் செவ்வாய்: இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிக்கு நல்ல காலம் தொடங்க போகுது..
Mars Transit In Cancer 2024: வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடக ராசி சந்திரனின் ராசியாகும். இந்த ராசிக்கு 18 மாதங்களுக்கு பின் செவ்வாய் செல்கிறார். இந்த கடக ராசியில் செவ்வாய் வழக்கத்தை விட நீண்ட காலம் பயணிக்கவுள்ளார்.

கடக ராசிக்கு செவ்வாய் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியானது சாதகமான பலன்களை அளிக்கும். இப்போது கடகம் செல்லும் செவ்வாயால் அக்டோபர் 20 முதல் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். தாய்வழியில் இருந்து நல்ல பண வரவு இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வெற்றிகள் குவியும். மன தைரியமும், துணிச்சலும் அதிகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications