Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
சனி செவ்வாய் உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது..
Mars Saturn Make Navpancham Rajyog 2025: ஜோதிடத்தில், ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். இந்த சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவானின் மீன ராசிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் நுழைந்துள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் ஏழரை சனி மற்றும் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இந்த சனி பகவான் மீன ராசியில் இருந்தாலும், சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது அதன் பார்வையாலோ ஒன்றிணைந்தோ, ராஜயோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் ஏப்ரல் 05 ஆம் தேதி, அதாவது இன்று சனி பகவானும், செவ்வாயும் 120 டிகிரியில் ஒன்றிணைந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.

ஜோதிடத்தின் படி, செவ்வாய் மற்றும் சனி 9 மற்றும் 5 ஆவது வீட்டில் இருக்கும் போது, நவபஞ்ச ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காணவுள்ளனர். இப்போது சனி செவ்வாயால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
நவபஞ்ச ராஜயோகமானது கடக ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கப் போகிறது. அதுவும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் கௌரவம் அதிகரிக்கும். சனி மற்றும் செவ்வாயின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிப்பாற்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இலக்குகளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். சனி மற்றும் செவ்வாயின் அருளால் நல்ல பொருள் இன்பங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் அதிர்ஷ்ட கதவைத் திறக்கப் போகிறது. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் நடந்து வரும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். சனியின் ஆசியால் தன்னம்பிக்கையும், மன உறுதியும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சட்ட விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications