Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே தலைகீழா மாறப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா
ஜோதிட சாஸ்திரத்தில், ஒரு கிரகத்தின் மகத்துவம் அது அமைந்துள்ள ராசியைப் பொறுத்தது. ஒரு கிரகம் எவ்வளவு நற்பலன்களை அளிக்கும் கிரகமாக இருந்தாலும், அது ஒரு பகை கிரகத்தின் ராசியின் வழியாகச் சென்றால், அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி அடையும் போது, அதன் ராசியும் நட்சத்திரமும் மாறுகின்றன, இதன் மூலம் அந்த கிரகத்துடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் மாறுகின்றன.
கோள்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், ஜனவரி 21 ஆம் தேதி தனது வக்ர பெயர்ச்சியைத் தொடங்குகிறது. செவ்வாய் புதனின் ராசியான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் கிரகம் ஆற்றல், முயற்சி மற்றும் போட்டியின் கிரகமாகும்.

செவ்வாய் பொதுவாக தீமையைக் கொண்டுவரும் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜனவரி 21 ஆம் தேதி நடக்கும் செவ்வாய் வக்ர பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்குப் பலனளிக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
செவ்வாயின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசியில் நிகழ்கிறது. எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் எந்தவொரு முயற்சியையும் தைரியமாக தொடங்க முடியும். இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட முடியும் மற்றும் வியாபாரிகள் பல சாதனைகளை செய்ய முடியும்.
உங்கள் வேலையில் பெருமையும் திருப்தியும் அடைவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் தேடிவரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்பட முடியும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை வகுக்கலாம், இது அவர்களுக்கு நற்பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் வக்ர பெயர்ச்சியால் பல நன்மைகளை அடையப்போகிறார்கள், குறிப்பாக வேலையில் செழிப்பை அனுபவிப்பார்கள். நீண்ட காலமாக நிதி நெருக்கடியை அனுபவித்து வந்த துலாம் ராசிக்காரர்கள், இந்தக் காலகட்டத்தில் நிதி முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத்தரம் வெகுவாக மேம்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும்.
வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இந்த இந்த காலகட்டத்தில் சரியான வாய்ப்புகளைப் பெறலாம். திருமணமானவர்களுக்கு செவ்வாயின் வக்ர பெயர்ச்சி நன்மைகளை அளிக்கும். திருமண வாழ்வில் எதிர்பாராத மகிழ்ச்சிகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வாயின் வக்ர பெயர்ச்சி எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறது. எதிர்பாராத வழிகளிலிருந்து பணம் வரும். நீங்கள் படிப்பு மற்றும் வேலை இரண்டிலும் சிறந்து விளங்க முடியும். மாணவர்கள் தங்கள் சிறப்பான ஆற்றல் மூலம் பல சாதனைகளைப் படைக்கலாம். புதிய வேலைகள் அல்லது திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு நல்ல நேரம்.
வேலையில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் சக ஊழியர்களின் உதவியுடன் தங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிப்பார்கள்.இது அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
