கடக ராசியில் வக்ரமாகும் செவ்வாய்: டிசம்பரில் இந்த 3 ராசிக்காரங்க பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..

Mars Retrograde In Cancer On 07 December 2024: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தற்போது சந்திரனின் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 07 ஆம் தேதி செவ்வாய் கடக ராசியில் வக்ரமாகவுள்ளார். இந்த வக்ர நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இருக்கப் போகிறார்.

Mars Retrograde In Cancer On 07 December 2024 These Zodiac Signs Will Face Money Problems

கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தடைபடுவதோடு, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அதுவும் தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் வக்ரமாவதால், 3 ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் அதிகம் ஈடுபடலாம். வீட்டு சூழல் மோசமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். மேலும் அலுவலகத்தில் செய்யும் சிறு தவறுகளால், உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வு தடுக்கப்படலாம்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. வணிகர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. இல்லாவிட்டால், அந்த பணம் திரும்ப கைக்கு வராது. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். வீண் செலவுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மோசமாகலாம். சொத்து மற்றும் புதிய வீடு வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமானது அல்ல. சொத்து தொடர்பான பிரச்சனைகளால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சண்டைகள் வரலாம். வீட்டு சூழல் மோசமாக இருக்கும். இக்காலத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, November 23, 2024, 23:41 [IST]
Desktop Bottom Promotion