Latest Updates
-
வார ராசிபலன் (01 November 2026-07 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
பாவக்காய் வாங்குனா இந்தஉருளைக்கிழங்கோட சேர்த்து சுக்கா பண்ணுங்க - கசப்பே இல்லாம செமையா இருக்கும் -
இந்தியாவின் 'பால் நகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
2 தக்காளியும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சட்னியை செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
அக்டோபர் 31, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
குரு-செவ்வாய் சிம்ம ராசியில் இணைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்! -
மீந்து போன சப்பாத்தியை வைச்சு இந்த மாதிரி உப்பு செய்யுங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
தீபாவளிக்கு கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்!
செவ்வாய் வக்ர பெயர்ச்சி அடைவதால் இந்த 3 ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டப்போறாங்களாம்...!
2025 ஆம் ஆண்டில் போர், கோபம், ஆற்றல் மற்றும் லட்சியத்தின் கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய், கடக ராசியில் வக்ர பெயர்ச்சியால் அடைகிறார். இந்த சக்தி வாய்ந்த கிரக பெயர்ச்சி ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு தனித்துவமான மாற்றங்களை உருவாக்குகிறது. வக்ர பெயர்ச்சி பெரும்பாலும் நமது திட்டங்களை மெதுவாக்கவும், மறுமதிப்பீடு செய்யவும் மற்றும் செம்மைப்படுத்தவும் ஒரு வாய்ப்பைக் கொண்டு வருகின்றன, செவ்வாயும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் கடக ராசியில் நடக்கும் செவ்வாய் இந்த வக்ர பெயர்ச்சி வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தரும், குறிப்பாக தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அற்புத நன்மைகளை அளிக்கும்.

செவ்வாய் வக்ர பெயர்ச்சி எப்போது நடக்கிறது?
செவ்வாய் 7 டிசம்பர் 2024 அன்று கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறது, மேலும் இந்த பயணம் சில வாரங்களுக்கு தொடரும். இதற்கு பிறகு, புத்தாண்டில் செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிதுனத்தில் நுழைகிறார். இந்த காலகட்டம் சுய முன்னேற்றத்திற்கான ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது. வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்கள் செயல்படுவதற்கு முன் சிந்திக்கவும், கவனமாக திட்டங்களை உருவாக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தை பெறவும் ஊக்குவிக்கும். செவ்வாயின் இந்த வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையும் ராசிகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மேஷம்
மேஷத்தைப் பொறுத்தவரை, செவ்வாய் வக்ர பெயர்ச்சி தொடர்பு கொள்தல் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றில் வாய்ப்புகளைத் தரும். செவ்வாய் மேஷத்தை ஆளும் கிரகமாக இருப்பதால், இந்த பெயர்ச்சி அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசிக்காரர்கள் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருந்த பழைய திட்டங்கள் அல்லது யோசனைகளை மீண்டும் தொடங்கலாம்.
மேஷ ராசியினருக்கு அவர்களின் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும், மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய வழிகளை ஆராயவும், நீடித்த உறவுகளை உருவாக்கவும் இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான துறைகள் அல்லது தகவல் தொடர்பு சார்ந்த தொழில்களில் பணிபுரிபவர்கள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகளை பெறலாம். இதனால் அவர்களின் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் செவ்வாஇந்த வக்ர பெயர்ச்சியால் நிதி வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலம் கடந்த முதலீட்டு வாய்ப்புகள் அல்லது ஆரம்பத்தில் லாபமற்றதாகத் தோன்றிய திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பைக் கொண்டு வரலாம். சிம்ம ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் கிரகமானது வளங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், புத்திசாலித்தனமான நிதித் தேர்வுகளை செய்வதற்கும் வாய்ப்புகளைக் கொடுக்கிறது.
வியாபாரத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் உடனடி இலாபத்தைக் காட்டிலும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பயனடைவார்கள், ஏனெனில் வக்ர பெயர்ச்சி நிலையான வளர்ச்சியைக் கொண்டுவரும். திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் நிதி ஸ்திரத்தன்மையை நோக்கி ஒரு நிலையான பயணத்தை செய்வதற்கும் இது ஒரு சிறப்பான காலம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உறவுகளில் மேம்பாடு மற்றும் உணர்ச்சிரீதியான பிணைப்பை அனுபவிப்பார்கள். உறவுகளில் பொறுமை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணரும் காலமாக இது இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் குடும்பம், நண்பர்கள் அல்லது வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைவதற்கும், கடந்தகால மோதல்களை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் தீர்ப்பதற்கும் இந்த காலம் சிறந்தது.
உறுதியான காதல் உறவுகளில் உள்ளவர்களுக்கு, செவ்வாயின் வக்ர பெயர்ச்சி ஒரு புதிய புரிதலைக் கொண்டு வர முடியும். தொழில்முறை உறவுகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம் , இது தனுசு ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையை பலப்படுத்துவதற்கான சிறந்த காலமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

