Latest Updates
-
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..
புதன் செவ்வாயால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Shadashtak Yog On 08 January 2025: வேத ஜோதிடத்தில் செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். ஏனெனில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாவார். அதேப் போல் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஜனவரி 08 ஆம் தேதி, அதாவது இன்று காலை 5.55 மணிக்கு செவ்வாயும், புதனும் ஒன்றுக்கொன்று 150 டிகிரியில் இருந்து, ஷடாஷ்டக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளன.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு சற்று மோசமாகவும் இருக்கும். இப்போது புதன், செவ்வாய் உருவாக்கியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக ராஜயோகத்தால் வாழ்க்கையில் ஆடம்பரங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் பலவிதமான நற்பலன்களைப் பெறக்கூடும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சொந்த தொழிலை தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக ராஜயோகமானது எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரும். தொழிலுக்காக வங்கியில் கடனுக்காக காத்துக் கொண்டிருந்தால், அது எளிதில் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதன் மூலம் நிறைய லாபத்தைப் பெற முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் நல்ல பலன்களைத் தரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குழந்தைகளால் சந்தித்த டென்ஷன் குறையும். தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications