Latest Updates
-
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது! -
தமிழ்நாட்டில் கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? -
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகுதாம்
குரு-செவ்வாய் ரிஷப ராசியில் 12 ஆண்டுகளுக்கு பின் இணையும் அபூர்வ நிகழ்வால் இந்த 3 ராசிக்காரங்க ராஜாவாக போறாங்க!
குரு பகவான் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு மாறுகிறார். ஜூலை முதல் வாரத்தில் தற்போது மேஷ ராசியில் இருக்கும் செவ்வாயும் ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார். எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசி இந்த சிறப்புமிக்க கிரகங்களின் இணைவைக் காண்கிறது.
இந்த இணைப்பின் விளைவை ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்க்கையிலும் காணலாம், ஆனால் இந்த அரிய சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்கள் மிகவும் அரிதான சுப பலன்களை பெற போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் அதிர்ஷ்டத்தைப் பெற போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைப்பு பல நன்மைகளைத் தரும். இந்த கிரக சேர்க்கை காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் அதிகம் கிடைக்கும். எதிர்பாராத வழிகள் மூலம் பணம் தேடி வரும்.
மென்மையான வார்த்தைகள் மற்றும் பேச்சுத்திறன் மூலம், நீங்கள் மற்றவர்களின் அபிமானத்தையும் அன்பையும் கைப்பற்ற முடியும், அது உங்கள் வாழ்க்கையில் பல்வேறு லாபங்களைக் கொண்டுவரும். உங்களின் பேச்சாற்றல் மூலம் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தி லாபம் பெறலாம்.
மகரம்
ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் இணையப் போவதால், மகர ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல காலம் தேடிவரப்போகிறது. மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் இந்த அரிய சேர்க்கை நடைபெறுகிறது. குழந்தைகள் மூலமாகவோ அல்லது குழந்தைகள் தொடர்பான சுபச் செய்திகளைக் கேட்கும் யோகம் உண்டாகும்.
இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணியில் இருபவர்களுக்கு வேலையில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு சாதகமான காலம் வரும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் மகர ராசிக்காரர்களுக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்த வரையில் ரிஷப ராசியில் உருவாகும் அபூர்வ சேர்க்கை பல நன்மைகளைத் தரும். இந்த இணைவு கும்ப ராசியின் நான்காம் வீட்டில் நடைபெறுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் வரப்போகிற காலங்களில் வாழ்வில் நல்ல வசதியைப் பெறுவார்கள்.
புதிய வாகனம், சொத்து வாங்கும் கூட்டம் கூடும்வாய்ப்புகள் உருவாகும். பணியில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் ஈட்ட முடியும். குறிப்பாக சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
