Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
Margazhi Rasipalan 2025: மார்கழி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா?
Margazhi Month Rasipalan 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதி மற்றும் இவர் ஒரு ராசியில் 1 மாத காலம் இருப்பார். சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். சூரியன் இந்த தனுசு ராசியின் ஜனவரி 16 ஆம் தேதி வரை இருப்பார். இந்த ராசியில் சூரியன் பயணிப்பதால் தமிழ் மாதமான மார்கழி மாதம் பிறக்கவுள்ளது.

சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் பிறந்துள்ள மார்கழி மாதமானது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது 2025 டிசம்பரில் நடக்கும் சூரிய பெயர்ச்சியால் பிறக்கும் மார்கழி மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் தொழிலில் மந்தநிலை ஏற்படலாம். புதிய திட்டங்களைத் தொடங்குவதையோ அல்லது ஒப்பந்தங்கள் செய்வதையோ தவிர்க்க வேண்டும். உடன் வேலை செய்வோருடன் ஒருங்கிணைப்பைப் பேணுங்கள். இல்லையெனில் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். திடீரென்று கூடுதல் பணிச்சுமை ஏற்படும். சில பெரிய பிரச்சனைகள் உங்கள் கவலைகளை அதிகரிக்கும். அதிகப்படியான பயணம் உடல் வலியை ஏற்படுத்தும்.
கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதமானது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றியுடன், நல்ல லாபமும் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மார்கழி மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வெற்றிகள் குவியும். வணிகத்தில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். உறவுகள் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதமானது கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி நிலை வலுபெறும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். எதிர்பாராத பெரிய செலவுகள் ஏற்படக்கூடும். உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படும். உறவுகளில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். புதிய நபர்களைச் சந்திக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் செயல்திறன் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். செல்வம் பெருகும். பல வழிகளில் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதமானது மகர ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவை. மாணவர்கள் அதிக பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுப்பது குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காததால் ஏமாற்றமடைவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் மார்கழி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். தொழில் மற்றும் வணிகம் இரண்டிலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மார்கழி மாதத்தில் அனைத்து முயற்சிகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு வலி, சோர்வு மற்றும் இரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படலாம். துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications