Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மார்ச் மாதம் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்க போற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
March Horoscope 2025: 2025 தொடங்கி கண்ணை மூடி திறப்பதற்குள் இரண்டு மாதம் முடிந்து விட்டது. மார்ச் 2025 இல், சுக்கிரன், புதன், சனி மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் குறிப்பிடத்தக்க ராசி மாற்றங்களுக்கு உட்படும். இந்த பல்வேறு கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இல்லாவிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலகட்டத்தை வழங்கப்போகிறது.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் வணிகத் திட்டங்களை நம்பிக்கையுடன் விரிவுபடுத்தலாம் மற்றும் பொருளாதாரரீதியாக பெரிய முன்னேற்றத்தை அடையலாம். மார்ச் மாத தொடக்கத்தில், சுக்கிரன் மீன ராசியில் வக்ரமாக இருப்பார். மார்ச் 14 அன்று சூரியன் மீன ராசிக்குள் பிரவேசிப்பார், அதைத் தொடர்ந்து மார்ச் 15 அன்று புதன் மீன ராசியில் வக்ரமாக இருப்பார். பின்னர் மார்ச் 23 அன்று புதன் மீண்டும் நேரடி இயக்கத்திற்குச் செல்கிறார், அதே நாளில் சுக்கிரன் மீன ராசியில் உதயமாகிறார். மாத இறுதியில், மார்ச் 29 அன்று, கர்ம கிரகமான சனி கும்ப ராசியை விட்டு வெளியேறி மீன ராசிக்குள் நுழைவார்.

இந்த கிரக பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மார்ச் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகிற 4 ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
மார்ச் 29 அன்று சனிபகவான் ரிஷப ராசியின் சாதகமான இடத்திற்கு செல்வது அவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும். ரிஷப ராசியின் வருமான வீட்டில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவது புதிய நிதி வளங்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் சமூக கௌரவத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். கூடுதலாக, சனியின் சாதகமான நிலை வியாபார எதிரிகளை சமாளிக்கவும், அவர்களின் நிதி நிலையை வலுப்படுத்தவும் உதவும். மொத்தத்தில் மார்ச் மாதம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையின் பல சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது.
மிதுனம்
மார்ச் 30 முதல், சனி பகவான் மிதுன ராசியின் தொழில் வீடான 10-வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார், இதனால் அவர்களின் நிதி மற்றும் சமூக அந்தஸ்து மேம்படும். கடந்த களங்களில் உங்களை துன்புறுத்தி வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் அல்லது முதலீடுகளிலிருந்து எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம். இந்த பெயர்ச்சி உங்கள் தொழில் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும், வளர்ச்சியையும் தரும். இந்த மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு 2025-ன் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கப்போகிறது.
கடகம்
மார்ச் 30 முதல், சனிபகவான் கடக ராசியின் அதிர்ஷ்ட வீடான 9-வது வீட்டிற்கு இடம் பெயர்வதால், அவர்கள் வாழ்க்கையில் நீண்ட கால நேர்மறையான மாற்றங்களை ஏற்படப்போகிறது. சனி அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு இந்த வீட்டில் தங்கி, அவர்களின் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தி, வாய்ப்புகளையும், வெற்றிகளையும் குவிக்கப்போகிறது. வியாபாரத்தில் அவர்களின் கடின உழைப்புக்கும், முயற்சிகளுக்கும் கிரக அமைப்புகள் ஆதரவாக இருப்பதால் அவர்கள் பெரிய சாதனைகளை செய்யப்போகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தின் தொடக்கம் கலவையான பலன்கள் நிறைந்ததாக இருக்கும். மார்ச் 13 வரை தேவையற்ற செலவுகள் மற்றும் மோதல்களைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், மார்ச் 14 க்குப் பிறகு, சூரியன் மீன ராசிக்குள் பிரவேசிக்கும்போது, பொருளாதார நன்மைகள் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் தோன்றும். இது தொழில்முறை மற்றும் நிதி முன்னேற்றத்திற்கு சாதகமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

