Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மகாலட்சுமி ராஜயோகத்தால் ஜூன் 9 ஆம் தேதிக்கு பின் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினை தீரப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரக இயக்கத்தின் போதும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலு பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஜோதிடத்தில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. நவகிரகங்களிலேயே வேகமாக நகரும் கிரகம் சந்திரன்தான். எனவே சந்திரன் மற்ற கிரகங்களுடன் அடிக்கடி இணைகிறது. ஜூன் மாதத்தில், சந்திரன் செவ்வாய் கிரகத்துடன் இணைவதால், மகாலட்சுமி ராஜயோகம் ஏற்படுகிறது.
இந்த மகாலட்சுமி ராஜயோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டுவரப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி ராஜயோகம் எப்போது உருவாகிறது?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் தளபதியான செவ்வாய் சிம்ம ராசியில் இருக்கிறார். ஜூன் 9 ஆம் தேதி காலை 8.50 மணிக்கு, சந்திரன் விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்த நேரத்தில், சந்திரனும் அதே ராசியில் இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இது ஜூன் 11 வரை நீடிக்கும். மகாலட்சுமி ராஜயோகத்தின் விளைவாக,நற்பலன்களை அறுவடை செய்யப்போகும் ராசிக்காரர்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் அற்புதமான நன்மைகளை அளிக்கப் போகிறது. இதனால் அலுவலக வாழ்க்கையில், குறைவான பிரச்சனைகள் இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் சரியான முயற்சிகளால் வெற்றியை அடைய முடியும். மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்கலாம், மேலும் உங்கள் கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் கடந்த கால வேலைகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும்.
இந்த காலகட்டத்தில் பல பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன, மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மகாலட்சுமி யோகம் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. இந்த யோகத்தால் அவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.
தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலைக்காக நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கலாம், இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறலாம். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நீங்கள் லாபம் ஈட்டலாம், மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் துணையுடனான நீண்டகால வாக்குவாதங்கள் இப்போது முடிவுக்கு வந்து குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
சிம்மம்
மகாலட்சுமி ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தருகிறது. தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது நிலையாக இருக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களின் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். மொத்தத்தில் வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

