Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த தேதிகளில் பிறந்தவங்க சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
Maha Shivratri 2025: சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி நாளானது பிப்ரவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானுக்கு நான்கு ஜாமங்களிலும் பூஜைகளை செய்து, வழிபட்டு வருவார்கள்.
இந்த மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால், அவரது பரிபூர்ண ஆசி கிடைப்பதோடு, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியில் இருந்தே சிவபெருமானின் ஆசியை பெற்றிருப்பார்கள். இப்படி சிவனின் ஆசி கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானின் ஆசியைப் பெற்றவர்கள் என்பதைக் காண்போம்.
எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியன். இந்த தேதியில் பிறந்தவர்கள் சிவனின் ஆசியைப் பெற்றவர்கள். அதுவும் இந்த மகாசிவராத்திரி இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிவனின் ஆசியால் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் நிறைவடையும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை வலுவடையும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் சிவனின் தலையில் அமர்ந்திருப்பவர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானின் ஆசியைப் பெற்றவர்கள். அதே சமயம் வருகிற மகா சிவராத்திரி மிகவும் அற்புதமாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணின் அதிபதி புதன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிவனின் ஆசியைப் பெற்றிருந்தாலும், மகா சிவராத்திரியில் இருந்து வியாபாரம் செழிப்பாக இருக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
எண் 6
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் சிவனின் அருளைப் பெற்றிருந்தாலும், மகா சிவராத்திரியில் இருந்து வாழ்க்கை செழிப்பாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. மகா சிவராத்தி நாளில் சிவனுக்கு பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்து, சிவ சாலிசாவை பாராயணம் செய்தால், இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணின் அதிபதி சனி பகவான். இந்த சனி பகவானின் சிவனின் தீவிர பக்தர். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களும் சிவ பக்தர்களாக இருப்பர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால், சிவனின் சிறப்பான ஆசீர்வாதம் கிடைக்கும். முக்கியமான வேலைகள் நிறைவேறும். தொழிலில் வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications