Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
வருகிற மகாசிவராத்திரி முதல் சிவனின் அருளால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து தலைவிதி மாறப்போகுது
Maha Shivratri 2025 Lucky Zodiac Signs: மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானுக்கு உரிய மிகவும் விஷேசமான நாள் தான் மகாசிவராத்திரி. இந்த மகா சிவராத்திரி தினமானது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. என்ன தான் மாதந்தோறும் மகா சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் விஷேசமானது.
இந்நாளில் சிவ பக்தர்கள் சிவபெருமானின் ஆசியைப் பெற விரதமிருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து பூஜை செய்து வணங்கி வருவார்கள். இந்த மகாசிவராத்திரி நாள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமண நாளாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது. முக்கியமாக இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் திருவோண நட்சத்திரமானது மாலை வரை இருக்கும். அதோடு மங்களகரமான யோகாவும் உருவாகி வருகிறது. இதனால் இந்நாளில் செய்யப்படும் வழிபாடு மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இந்த யோக காலத்தில் சிவன் மற்றும் பார்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், வாழ்க்கையில் செல்வம் பெருகும் மற்றும் துன்பங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது 2025 மகா சிவராத்திரி அன்று சிவபெருமானின் ஆசியைப் பெறப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியில் இருந்து வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தொழில் செய்து வந்தால், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலனை சிவபெருமான் நிச்சயம் அளிப்பார். நிதி நிலை வலுவடையும். இந்த நன்னாளில் மேஷ ராசிக்காரர்கள் சிவ லிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் வில்வ இலைகளை படைத்து வழிபடுவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் இருந்து சிவபெருமானின் ஆசி கிடைக்கும். இதனால் வேலையில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் சில புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது எதிர்காலத்தில் நீண்ட காலத்தில் பெரிய லாபத்தைத் தரும் வகையில் இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவ லிங்கத்திற்கு கருப்பு எள்ளு விதைகளை படைத்து வழிபட்டால், சிவனின் ஆசியால் நினைத்த காரியம் வெற்றிகரமாக முடிவடையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் இருந்து சிவனின் ஆசியைப் பெறவுள்ளதால், நிதி ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் தேடி வரும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். புதிய வீடு, கார் அல்லது பிற சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு தேன் அபிஷேகம் செய்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications