Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
Maasi Matha Rasi Palan 2026: மாசி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா?
Maasi Matha Rasi Palan 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி ராசியை மாற்றுகிறார். அப்பெயர்ச்சியின் போது சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மாசி மாதம் பிறக்கிறது.
இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். ஜோதிடத்தில் சூரியனும், சனி பகவானும் நட்பு கிரகங்கள் இல்லாவிட்டாலும், தந்தை மகன் உறவைக் கொண்டவர்கள். எனவே இந்த சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள மாசி மாதமானது சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள மாசி மாதமானது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். திருமணத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிதி நிலைமை வலுவடையும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். மனதில் தெளிவு பிறக்கும். நம்பிக்கையுடன் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் எவ்வளவு முயற்சித்தாலும், வேலையை முடிக்க முடியாமல் தடைகளை சந்திக்க நேரிடும். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டிய காலம். கூட்டு தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் நடத்தை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். சமூக வட்டம் விரிவடையும். புதிய நட்புகள் கிடைக்கும். அதன் மூலம் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் சேவை மனப்பான்மை அதிகரிக்கும். வேலையில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இதன் மூலம் தொழிலில் ஒரு நல்ல நிலைக்கு வருவீர்கள். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இம்மாதத்தில் உடல்நலம் மேம்படும். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த மாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதிய திட்டங்களை தொடங்க நினைத்தால், இம்மாதம் சாதகமாக இருக்கும். படைப்பு வேலைகளில் வழக்கத்தை விட ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப விஷயத்தில் சமநிலையைப் பேண வேண்டும். எந்த ஒரு முடிவுகளையும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். அவசரத்தை தவிர்க்க வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதமானது தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிறு முயற்சிகளும் பெரிய பலன்களைத் தரும். சிறப்பான பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் பரம்பரை சொத்துக்கள் அல்லது பழைய முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தில் பரஸ்பர ஒருங்கிணைப்பு அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். உங்களின் நிலை இம்மாதத்தில் வலுபெறும். வாழ்க்கையில் ஒரு புதிய திசையை பெறுவீர்கள்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாசி மாதத்தில் பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இம்மாதத்தில் நீங்கள் தனியாக நேரத்தை செலவிடுவது உங்களுக்கு நேர்மறை ஆற்றலைத் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












