Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
Budhaditya Rajyog In Aquarius 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதி மற்றும் இவர் ஒரு ராசியில் ஒரு மாதம் வரை இருப்பார். அதே சமயம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி மற்றும் இவர் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் இந்த கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் புதன் மற்றும் சூரியன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். மேலும் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். ஆனால் இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் தொழில், நிதி நிலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வெற்றிகள் குவியும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். முக்கியமாக நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். குறிப்பாக சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களில் நிதி நிலைமை வலுவடையும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். உங்களின் கருத்துக்கள் அனைத்து இடங்களிலும் மதிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


