Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சந்திர கிரகணத்தின் மோசமான தாக்கத்தை குறைக்கணுமா? அப்ப உங்க ராசிப்படி இத மட்டும் செய்யுங்க போதும்...
Lunar Eclipse 2025: வானியல் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதுவும் ஒரு ஆண்டில் 2 சந்திர கிரகணம், 2 சூரிய கிரகணம் என 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 07 ஆம் தேதி இரவு நிகழ்கிறது. இந்து மதத்தில் கிரகணங்கள் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வு ஒருவரது வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்துவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இதன் விளைவைக் குறைக்க ஒருசில விதிகள் பின்பற்றப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணம், ஒரு முழு சந்திர கிரகணமாக இருப்பதோடு, இந்த கிரகணத்தை இந்தியாவில் நன்கு காண முடியும். இதனால் இந்த சந்திர கிரகணத்தின் சூதக் காலமும் இந்தியாவில் செல்லுபடியாகும்.

இந்திய நேரப்படி, சந்திர கிரகணமானது செப்டம்பர் 07 ஆம் தேதி இரவு 9.57 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 08 ஆம் தேதி அதிகாலை 1.27 மணிக்கு முடிவடைகிறது. அதுவும் இந்த சந்திர கிரகணத்தின் போது நிலா சிவப்பு நிறத்தில் இருப்பதால், இது இரத்த நிலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் தொடர்ந்து 3.30 மணிநேரம் நீடித்திருக்கும்.
இந்த சந்திர கிரகணத்தின் சூதக் காலத்தில் ஷாப்பிங் செய்வது, முடி, நகம் போன்றவற்றை வெட்டுவது மற்றும் பிற சுப காரியங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சந்திர கிரகணம் முடிந்த பின் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களும் ஒருசில விஷயங்களை செய்வதன் மூலம், நல்ல பலன்களைப் பெறலாம். இப்போது கிரகணம் முடிந்த பின் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவைகள் என்னவென்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சந்திர கிரகணம் முடிந்த பின் அனுமனை வழிபட வேண்டும். கிரகண காலத்தில் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது நல்லது. இதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் சந்திர கிரகணத்திற்கு பின் தானம் செய்ய வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானின் பெயர்களையும், மஹாமிருத்யுஞ்சாய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சந்திர கிரகணம் முடிந்த பின் குளித்துவிட்டு "ஓம் நமோ நாராயணாய நமஹ" என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது வாழ்வில் உள்ள எதிர்மறை தாக்கத்தைக் குறைக்கும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்தவர்கள் சந்திர கிரகணத்திற்கு பின் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வது நல்லது. இதன் மூலம் அது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சந்திர கிரகணம் முடிந்த பின் தானியங்களை தானம் செய்வது நல்லது. அதோடு இந்த ராசிக்காரர்கள் சூரிய பகவானின் நாமங்களை பாராயணம் செய்ய வேண்டும். இது வாழ்வில் உங்கள் மதிப்பை உயர்த்தும்.
கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் சந்திர கிரகணம் முடிந்த பின் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. அதோடு துர்கா சப்தஷதியை சொல்வது நல்லது. இதன் மூலம் வாழ்க்கையில் உள்ள அனைத்து எதிர்மறை தாக்கங்களும் நீங்கி, வாழ்க்கை செழிக்கும்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் சந்திர கிரகணம் முடிந்த பின் அரிசியை தானம் செய்வது நல்லது. மேலும் லட்சுமி தேவிக்கு பூக்களை படைத்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்திற்கு பின்பு அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். இது இதுவரை மனதில் இருந்த பயத்தை ஒழிக்கும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் சந்திர கிரகணத்திற்கு பின் அனுமனை வழிபாடு செய்வது நல்லது. மேலும் அனுமனுக்கு பூந்தியை படைத்து வழிபாடு செய்து, அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சந்திர கிரகணம் முடிந்த பிறகு தானம் செய்ய வேண்டும். அதன் பின் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஓம் நமச்சிவாய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்திற்கு பின் கருப்பு நிற பொருட்களை தானம் செய்வது நல்லது. இது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் சந்திர கிரகணம் முடிந்த பின் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ஓத வேண்டும். இது வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications