Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
2026-ல் வெள்ளி பாதத்தில் நுழையும் சனி பகவான்: இந்த 3 ராசிகளின் பண கஷ்டங்கள் தீர்ந்து, நிதி நிலை உயரப்போகுது!
Lord Shani Dev Blessings In 2026: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இவர் கடின உழைப்பு, நீதி, ஒழுக்கம் ஆகியவற்றின் காரணியாவார். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் தற்போது குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் இந்த சனி பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். முக்கியமாக சனி பகவான் மீன ராசியின் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் 2026 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம்.

இந்த ஆண்டில் சனி பகவான் மீன ராசியில் பயணிக்கவுள்ளார். இந்த மீன ராசியில் இருப்பதால், 2, 5, 9 ஆவது வீட்டில் சனி பகவான் வெள்ளி பாதத்தில் பயணிப்பர். இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் சனி பகவானின் ஆசியால் மிகச்சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். பல வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது 2026-ல் சனி பகவான் வெள்ளி பாதத்தில் பயணிப்பதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சனி பகவான் வெள்ளி பாதத்தில் பயணிப்பது கடக ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகிறது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமான முடிவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
2026 ஆம் ஆண்டில் சனி பகவான் வெள்ளி பாதத்தில் பயணிப்பதால் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வேலை தொடர்பாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக யோசித்து சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
2026 ஆம் ஆண்டில் சனி பகவான் வெள்ளி பாதத்தில் பயணிப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் திறக்கும். இந்த ஆண்டில் வாழ்க்கை குறித்த சில சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வணிகம் அல்லது வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட கதவு திறக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications