Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
1 வருடத்திற்கு பின் மேஷத்தில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் செல்வம் அதிகரிக்கப்போகுது..
Lakshmi Narayan Rajyog 2025 In Aries After 1 Year: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுழு மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் புதன் மே மாத தொடக்கத்தில், அதுவும் மே 07 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மே 31 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயின் ராசியில் புதனும், சுக்கிரனும் சுமார் 1 ஆண்டு காலத்திற்கு பின் ஒன்றிணையவுள்ளனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. அதுவும் அந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. இப்போது மேஷ ராசியில் உருவாகும் லட்சமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அப்பிரச்சனை தீர்ந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறக்கூடும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நீண்ட நாட்களாக சிக்கிய பணத்தை இக்காலத்தில் திரும்ப பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
அலுவலகத்தில் சூழல் சாதகமாக இருக்கும். இதன் மூலம் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலைத்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
