Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்த குழந்தைகள் சிறிய வயதிலேயே பெரிய தொழிலதிபராகி ஆடம்பரமா வாழ்வார்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் விதியை வடிவமைப்பதில் நட்சத்திரங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன மற்றும் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு குணாதிசியத்தைக் கொண்டிருந்தாலும் ஆனால் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே செல்வத்தை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள்.
நட்சத்திரங்கள் செல்வாக்கு செலுத்தும் பல விஷயங்களில், ஒருவரின் நிதிநிலையும் முக்கியமான அம்சமாகும். இந்த பதிவில் சிறந்த தொழிலதிபராகவும், விரைவில் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமும் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இருக்குமென்று தெரிந்து கொள்ளலாம்.

பூச நட்சத்திரம்
வியாபாரத்தில் சிறந்து விளங்கும் மற்றும் பணத்தை ஈர்க்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பூச நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வியாழனால் நிர்வகிக்கப்படுகிறது.
இது வளர்ச்சி மற்றும் செழுமை ஆகியவற்றை அளிக்கிறது மற்றும் செல்வம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அடைய இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ஆசீர்வதிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலியாகவும், தாராள குணம் கொண்டவர்களாகவும் அவர்களின் செல்வத்திற்கு உதவும் இயற்கை குணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
ரோகிணி நட்சத்திரம்
செல்வத்திற்கான மிகவும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களின் பட்டியலில் அடுத்த இடத்தில் ரோகிணி நட்சத்திரம் உள்ளது. இது பிரம்மாவுடன் தொடர்புடையது மற்றும் வளர்ச்சி, கருவுறுதல் மற்றும் பொருள் வளம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் படைப்பாற்றல், வசீகரம் மற்றும் பணத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்கள் செல்வத்தைக் குவிக்கும் தொழில் அதிபர்களாகவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அஸ்தம் நட்சத்திரம்
செல்வத்தை ஈர்க்கும் தொழிலதிபராக மாறும் அதிர்ஷ்டம் உள்ள மற்றொரு நட்சத்திரம் அஸ்தம் ஆகும், இது புத்திக்கூர்மையின் கிரகமான புதன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் புத்திசாலிகள் மற்றும் திறமையானவர்கள், மேலும் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ளனர். அஸ்த நட்சத்திரம் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுசரிப்பு, துல்லியம் மற்றும் பகுப்பாய்வு திறன்களை ஆசீர்வதிப்பதால், அவர்கள் நிதி முயற்சிகளில் எளிதாக வெற்றி பெற முடியும்.
பூரம் நட்சத்திரம்
ஆடம்பரம் மற்றும் அழகின் கிரகத்தால் ஆளப்படும் சுக்கிரன் பூரம் நட்சத்திரத்தை ஆள்கிறது, இதனால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எளிதில் பணத்தை ஈர்க்கும் குணங்களால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் படைப்பாற்றல் மற்றும் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் திறமைகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் கலைத் திறமை, செல்வம் மற்றும் ஆடம்பரமான வசதிகளைப் பெறுவதில் தேர்ச்சி பெற்றவர்கள்.
உத்திரம்
உத்திர நட்சத்திரம் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுகிறது. இது செல்வத்தாய் அடைவதற்கான மிகவும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களில் ஒன்றாகும் மற்றும் தலைமைப்பண்பு மற்றும் கவர்ச்சியைக் குறிக்கிறது.
இந்த நட்சத்திரத்தின் கீழ் பிறந்தவர்கள் உறுதி, லட்சியம் மற்றும் சிறந்த மேலாண்மைத் திறன்களைக் கொண்டுள்ளார்கள், இது செல்வத்தை அடைவதில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல உதவுகிறது. சூரியனின் அருள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தொடர்ந்து செல்வத்தை நோக்கி ஓடும் ஆர்வத்தை அளிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
