Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூலை 06 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண மூட்டையை அள்ளப் போறாங்க...
Ketu Transit In Pooram Nakshatra On 06 July 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது, ஜூலை 06 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.
அதுவும் பூரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். கேது பூர நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். மேலும் பூரம் நட்சத்திரமானது சிம்ம ராசியில் அமைந்துள்ளது.

நிழல் கிரகமான கேது மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இப்படிப்பட்ட கேது ஜூலை 06 ஆம் தேதி பூர நட்சத்திரத்திற்கு செல்வதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக திடீர் நிதி நன்மைகளைப் பெற்று, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். குறிப்பாக திடீர் நிதி ஆதாயங்களைத் தரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது நன்மை பயக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். செய்யும் வேலையில் திருப்தி அடைவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திட்டமிட்ட ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக செய்து வந்த கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. அதுவும் வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகர்களின் முயற்சிகள் வெற்றி அடையும். வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
