Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
கேதுவின் இரட்டை பெயர்ச்சியால் மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியை கொடுக்கப்போகுதாம்!
ஜோதிட சாஸ்திரத்தில் கேது ஒரு நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. கேதுவின் மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்கும் நன்மை தீமைகளின் கலவையான விளைவுகளைக் கொண்டுவருகின்றன. மே மாதத்தின் தொடக்கத்தில், கேது ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்திற்கு ஆளாகப் போகிறார். ராசியில் சிம்ம ராசிக்கும், நட்சத்திரத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சி அடையப் போகிறார்.
இரண்டு பெயர்ச்சிகளும் ஒரே மாதத்தில் ஏற்படுவதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதனைகளும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திரம் மற்றும் ராசி மாற்றம் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கப்போகிறது. ரிஷப ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கேதுவின் இரட்டைப் பெயர்ச்சி பலவேறு நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேதுவின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. பல்வேறு புதிய வழிகளிலிருந்து அவர்களின் வருமானம் அதிகரிக்கும். அவர்கள் வாழ்க்கையிலிருந்த பல்வேறு பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பல வாய்ப்புகள் உருவாகும்.
அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், தன்னிறைவும் நிறைந்திருக்கும். மத விஷயங்களில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். அவர்கள் எதிர்பார்த்ததை விட வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்வார்கள். வெளிநாடு செல்ல விரும்பும் அவர்களின் கனவு நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
