Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
18 ஆண்டுகளுக்கு பின் சிம்மம் சென்றுள்ள கேது: 2026 வரை இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது...
Ketu Transit In Leo 2025: ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் கேது. இந்த கேது மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இப்படிப்பட்ட கேது ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 18 ஆண்டுகள் ஆகும்.
பலரும் கேதுவை மோசமான கிரகமாக நினைப்பார்கள். ஆனால் ஒருவரது ஜாதகத்தில் கேது நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல அதிர்ஷ்டத்துடனும், நிதி ஆதாயங்களையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வார். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்த சிம்ம ராசியில் கேது 2026 ஆம் ஆண்டு வரை இருப்பார். 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசிக்கு சென்றுள்ள கேதுவின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இருப்பினும் சில ராசிக்காரர்கள் கேதுவின் ஆசியைப் பெற்று, நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியையும் பெறுவார்கள். இப்போது சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வரை சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அந்த கனவு நனவாகும். மொத்தத்தில் நினைத்ததெல்லாம் நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறுவதோடு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பரம்பரை தொழிலில் இருப்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
கடகம்
கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வரை மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். அதுவும் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் உங்களின் பல முக்கியமான வேலைகள் சுலபமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications














