Latest Updates
-
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம்
2025-ல் சிம்ம ராசிக்கு செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க...
Ketu Transit In Leo 2025: வேத ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய கிரகங்கள் நிழல் கிரகங்களாகும். இந்த கிரகங்கள் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். மேலும் இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை பயணிக்கும்.
ராகு-கேது கிரகங்கள் பாவ கிரகங்களாக பலரும் நினைப்பதோடு, இந்த கிரகங்கள் ஒருவருக்கு கஷ்டத்தை மட்டும் தான் தருவதாக தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்விரு கிரகங்களும் ஒருவரை பணக்காரராக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டவர்கள்.

இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த 2025 ஆம் ஆண்டில் ராகுவும், கேதுவும் ராசியை மாற்றவுள்ளனர். அதுவும் இந்த பெயர்ச்சியானது 2025 மே மாதத்தில் நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது கேது சிம்ம ராசிக்கு செல்லவுள்ளார்.
சூரிய பகவானின் ராசிக்கு கேது செல்வதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் கேதுவால் 2025-ல் ராஜவாழ்க்கையை வாழப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு கேது செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பேச்சால் சமூகத்தில் தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பலவிதமான நற்செய்திகள் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு கேது செல்லவுள்ளார். இதனால் இநத ராசிக்கார்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை முழுமையாக நம்புவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த கேது பெயர்ச்சிக்கு பின் நல்ல சம்பளத்துடன் வேலை பெறுவீர்கள். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கையைப் பற்றிய கவலை இதுவரை இருந்தால், கேது பெயர்ச்சிக்கு பின் நீங்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையிடமிருந்து பண உதவி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications