Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கேது பெயர்ச்சியால் ஜனவரி 25 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Ketu Nakshatra Transit On 25 January 2026: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல், எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். அதோடு இந்த கேதுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. மேலும் இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
கிரகங்களில் கேது ஞானம், ஆன்மிகம், திடீர் திருப்பங்கள், மற்றும் பற்றின்மை ஆகியவற்றின் காரணியாவார். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் ஜனவரி 25 ஆம் தேதி கேது பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் மார்ச் 29 ஆம் தேதி வரை இருப்பார்.

ஜோதிடத்தின் படி, பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். கேதுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இருந்தாலும் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் பல பிரச்சனைகளையும், வியாபாரத்தில் நஷ்டத்தையும், உறவுகளில் கருத்து வேறுபாடுகளையும், பயணங்களால் நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். இப்போது கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை தொடர்பான சிக்கல்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் அலுவலகத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துலாம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் ஒருங்கிணைப்பைப் பராமரிப்பதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத அளவில் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தம்பதிகளிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
மீனம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வேலையை முடிக்க வழக்கத்தை விட அதிகமாக முயற்சியை செய்ய வேண்டியிருக்கும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வீர்கள். உண்ணும் உணவுகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
