காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்..

Kalsarp Yog On 09 June 2026: ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளன. இந்த யோகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தில் சக்திவாய்ந்த, அதே சமயம் அதிக சிரமங்களைத் தரக்கூடிய யோகமாக காலசர்ப்ப யோகம் கருதப்படுகிறது.

Kalsarp Yog On 09 June 2026 These Zodiac Signs Should Be Careful Till June 23

இந்த யோகமானது ஒருவரது வாழ்க்கையில் எதிர்பாராத மோசமான சூழ்நிலைகளை சந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட காலசர்ப்ப யோகம் ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் 7 கிரகங்கள் வரும் போது உருவாகிறது. இந்த காலசர்ப்ப யோகம் ஜூன் 09 ஆம் தேதி உருவாகிறது. இந்த யோகமானது ஜூன் 23 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.

இக்காலத்தில் இந்த யோகத்தின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொல்லப்போனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது காலசர்ப்ப யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

காலசர்ப்ப யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் அதிக பிரச்சனைகளால் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் பொறுமையாக இருந்து, வேலையை கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் உடன் வேலை செய்வோருடன் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிறு விஷயங்கள் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பண விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். காலசர்ப்ப யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க பால், தயிர் போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.

சிம்மம்

காலசர்ப்ப யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களில் வாழ்வில் பதற்றம் அதிகரிக்கும். தம்பதிகளிடையேயான உறவில் சிறு விரிசல் ஏற்படக்கூடும். சிறு விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். வணிகர்கள் வெற்றி பெற கடினமாஎ உழைக்க வேண்டும்.

தொழிலதிபர்களுக்கு சில முக்கிய ஒப்பந்தங்கள் கைநழுவி போகலாம். இதனால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடலாம். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அவசரப்படாமல் அனுபவசாலிகளின் ஆலோசனையை பெறுங்கள். பயணங்களின் போது உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. காலசர்ப்ப யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சிவபெருமானுக்கு உரிய மந்திரங்களை கூட சிவனை வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்

காலசர்ப்ப யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் தொழில் மற்றும் காதல் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். திடீரென்று எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். உறவுகளில் தவறான புரிதல்களால் விரிசல் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்க வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காலசர்ப்ப யோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்க்க அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, June 9, 2026, 14:45 [IST]
Desktop Bottom Promotion