Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குரு சுக்கிரனால் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ராஜயோகம்: மே மாதம் வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Jupiter Venus Make Parivarthan Rajyog 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான்.
அதே சமயம் தேவர்களின் குருவான குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று ராசியில் இருப்பதால், சக்தி வாய்ந்த பரிவர்த்தன யோகம் உருவாகியுள்ளது.

ஜோதிடத்தின் படி இரண்டு கிரங்கள் ஒருவருக்கொருவர் வீட்டில் வசிக்க ஆரம்பித்தால், எவ்வித தீங்கையும் விளைவிக்காது. மாறாக பாதுகாக்கும். அதோடு ராகுவும் மீன ராசியில் இருப்பதால், சுக்கிரனும் ராகுவின் பலத்தை பெற்றுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் பெருமளவில் நன்மைகளைப் பெறுவார்கள். இப்போது குரு மற்றும் சுக்கிரனால் உருவாகியுள்ள பரிவர்த்தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பரிவர்த்தன ராஜயோகத்தால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் வேலையில் சந்தித்த தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பரிவர்த்தன ராஜயோகம்தால் வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து ஓரளவு விடுபடுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்து, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளும் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பண பிரச்சனைகள் நீங்கும்.
வியாபாரிகளுக்கு நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மனக்கவலைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தன ராஜயோகமானது வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை வழங்கப் போகிறது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், வெற்றி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையை மாற்ற நினைத்து முயற்சித்தால் நல்ல வேலையைப் பெறலாம். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு, நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை வாங்கும் கனவு நனவாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications