Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் தீபாவளிக்கு முன் குரு-சுக்கிரனால் உருவாகும் பஞ்சாங்க யோகம்: அதிர்ஷ்ட ராசிகள்!
Panchank Yog Before Diwali 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
ஆனால் இந்த ஆண்டு குரு பகவான் ஆக்ரோஷமாக இருமடங்கு வேகத்தில் நகர்கிறார். அதாவது இந்த ஆண்டில் மட்டும் குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் தற்போது குரு பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் டிசம்பர் 08 ஆம் தேதி வரை இருப்பார்.

இதற்கிடையில் குரு பகவான் மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது நிலைகளின் மூலமோ பல சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கவுள்ளார். அதுவும் தீபாவளிக்கு முன் குரு பகவான் செல்வத்திற்கு காரணியான சுக்கிரனுடன் சேர்ந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது குருவும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 72 டிகிரியில் இருப்பார்கள்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பு நன்மைகளைப் பெறவுள்ளனர். அதோடு இந்த குருவின் ராசி மாற்றத்தால் ஹன்ஸ் ராஜயோகம் மற்றும் கேந்திரி திரிகோண ராஜயோகமும் உருவாகவுள்ளது. இப்போது பஞ்சாங்க யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனால் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனால் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பேச்சுத்திறனால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை மூலம் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனால் உருவாகும் பஞ்சாங்க யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆளுமை மேம்படும். முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications