Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் தனலட்சுமி யோகம்: இந்த 3 ராசிகளின் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கப்போகுது..
Jupiter Venus Conjunction Make Dhan lakshmi Yog 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் அதிர்ஷ்டம், நல்ல எண்ணம், செல்வம், ஞானம் ஆகியவற்றின் காரணியும் ஆவார். மிகவும் மங்களகரமான குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் தான், அவர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்.
இப்படிப்பட்ட குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது இவர் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் ஜூன் மாதத்தில் அஸ்தமனமாகவுள்ளார். அடுத்த 29 நாட்கள் குரு பகவான் அஸ்தமன நிலையில் இருக்கப் போகிறார். அதன் பின் ஜூலை மாதத்தில் உதயமாகவுள்ளார்.

அதே சமயம் ஜூலை மாதத்தில் அசுரர்களின் குருவான சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் குரு பகவான் உதயமாகி சுக்கிரனுடன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். இதன் காரணமாக இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் தனலட்சுமி யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் உருவாகப் போகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் செல்வத்தில் மிகப்பெரிய உயர்வைக் காண்பார்கள். மேலும் பல வழிகளில் இருந்தும் பணம் தேடி வரப்போகிறது. இப்போது குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் தனலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கையால் தனலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் வகையில் இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குருவின் ஆசியால் முடிவெடுக்கும் திறன் மேம்படும். இதன் மூலம் சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கையால் தனலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இது தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை காண வழிவகை செய்யும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கையால் தனலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். குருவின் ஆசியால் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இதன் மூலம் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். தாய் வழியில் இருந்து பணம் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications