Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
ஒரே மாதத்தில் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Jupiter Transits 2 Times In August 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் குரு பகவான் இரண்டு முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதாவது குரு பகவான் ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.

அதில் முதலாவதாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி குரு பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழையவுள்ளார். அதன் பின் ஆகஸ்ட் 30 ஆம் தேதி புனர்பூசம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் நுழைவுள்ளார். இப்படி இரண்டு முறை குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நன்கு தெரியும்.
முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்துடன், நிதி லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் மேஷ ராசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் உறவுகள் மேம்படும். நிதி நிலை சிறப்பாக மாறும். முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும்.
கடகம்
ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய கூட்டாளருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் வெற்றிகளும், பணமும் குவியும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகமாக முடிவடையும்.
மீனம்
ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நடக்கும் குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குரு பகவான் மீன ராசியின் அதிபதி என்பதால் சிறப்பான பலன்களைத் தருவார். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்றும் எண்ணத்தைக் கொண்டிருந்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். சொந்தமாக தொழிலை செய்யும் எண்ணம் இருந்து முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல பலன் கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் புதிய பண வரவை உருவாக்கும் வழிகள் திறக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications