Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
12 ஆண்டுகளுக்கு பின் கடகத்தில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளில் புரளப்போறாங்க...
Jupiter Transit In Cancer 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட குரு பகவான் கிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.
இந்த குரு பகவான் தற்போது புதனின் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் நுழைந்தார். இந்நிலையில் இந்த குரு பகவான் மிகவும் வேகமாக ராசியை மாற்றவுள்ளார். அதாவது 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். ஜோதிடத்தில் குருவும், சந்திரனும் நட்பு கிரகங்களாவர்.

குரு பகவான் இந்த கடக ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, நிதி ரீதியாகவும் நல்ல உயர்வைக் காணவுள்ளனர். இப்போது கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
குரு பெயர்ச்சியின் போது விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கப் போகின்றன. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களையும் பெறக்கூடும். புதுமண தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் பிரபலமாவார்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications