Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
12 ஆண்டுகளுக்கு பின் குரு மிதுன ராசிக்கு செல்வதால் ராஜயோகம் பெறப்போகும் நட்சத்திரக்காரர்கள் யார் தெரியுமா?
2025 பிறக்கப்போகிறது, வரப்போகிற புது வருடம் தங்கள் ராசிக்கு எப்படி இருக்குமென்ற ஆர்வம் அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும். 2025-ல் பல முக்கியமான கிரக பெயர்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.
2025-ல் நிகழப்போகும் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்று வியாழனின் ராசி மாற்றம். நற்பலன்களை அளிக்கும் கிரகமாகக் கருதப்படும் வியாழன் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 14, 2025 அன்று மிதுன ராசியில் நுழைகிறார். மிதுனம் புதனால் ஆளப்படும் கிரகமாகும். இந்த குரு பெயர்ச்சியால் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்(கிருத்திகை, ரோகிணி மற்றும் மிருகசீரிஷம்)
ரிஷப ராசியின் 8 மற்றும் 11 ஆம் வீடுகளின் அதிபதியான வியாழன் ரிஷப ராசியின் இரண்டாம் வீட்டிற்குள் நுழைய உள்ளார். அவர்கள் வாழ்வில் கடவுளின் அருளால் உச்சத்தை அடைய வேண்டிய நேரமிது. இப்போது உங்களின் நிதிநிலை வெகுவாக அதிகரிக்கும், கடந்தகால கடன் சுமைகளிலிருந்து விடுபடலாம். மற்றவர்கள் உங்ககளுக்கு மரியாதைக் கொடுப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் காலம் இது.
கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பணியில் இருப்பவர்களுக்கு தொழில் துறையில் எதிர்பார்த்த உயர்வு இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பிரகாசிக்கும். பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும். புதிய வீடு, வாகனம், சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
சிம்மம்(மகம், பூரம், உத்திரம்)
சிம்ம ராசிக்கு 5 மற்றும் 8 ஆம் வீடுகளின் அதிபதியான வியாழன் தற்போது 11 ஆம் வீட்டிற்கு மாறுகிறார். பதினொன்றாமிடத்தில் வியாழன் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நினைத்ததை எல்லாம் அடையும் அதிர்ஷ்டசாலிகளாக மாறுகிறார்கள். இந்த வீடு லாபம் மற்றும் பல்வேறு சாதனைகளுடன் தொடர்புடையது. இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உங்களிடம் பலர் உதவிக்கு வரலாம், அவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். வியாபாரத்தில் ஏற்றமும் வளர்ச்சியும் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் துணையைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வாய்ப்பு அமையும். கருத்து வேறுபாடுகளை மறந்து துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பெறலாம். நீண்ட பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளுக்காக காத்திருந்தவர்களுக்கு இப்போது அந்த யோகம் அமையும்.
துலாம்(சித்திரை, விசாகம், ஸ்வாதி)
வியாழன் துலாம் ராசியின் ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். இது துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட வீடாகும். குரு பெயர்ச்சி காலம் என்பது அவர்களின் வாழ்க்கையில் அனைத்து அதிர்ஷ்டங்களும் வரும் காலமாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துணிச்சலான காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெறலாம். எதிரிகளால் ஏற்படும் சிக்கல்கள் முடிவுக்கு வரும். மாணவர்களின் கல்வி மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












